• சஸ்டஜன் - பெற்றோர்களின் ஆரோக்கியமிக்க தலைமுறையின், வாழ்க்கைக்கு ஆதாரமான போசணை
இலங்கை அதனது முக்கியமான குடிப்பரம்பல் பாதையில் தற்போதுள்ளது. பிறப்பு வீதம் தொடர்ந்தும் குறைவடைய வாழ்க்கை எதிர்பார்ப்பு வீதம் அதிகரித்துள்ளமையினால், 2030 ஆம் ஆண்டாகும்போது, இலங்கையர்களில் ஐந்தில் ஒருவர் 60 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பார்.
இத்துரிதமான மாற்றமானது அடைந்துக்கொள்ள முடியாத பொருளாதார மற்றும் சமூக பின்விளைவுகளை – உற்பத்தித் திறன்மிக்க குடித்தொகையின் சுருக்கம், அதிகரித்துள்ள சுகாதார மற்றும் ஓய்வூதிய செலவீனங்கள், வைத்தியசாலை தகவுகளின் மீது சுமையாகும் அழுத்தம், மற்றும் குடும்பங்களிலும் அதேப்போல தேசத்திலுமாக ஒரு சிரமமாகக்கூடிய உயரும் தங்கியிருப்போர் வீதம்- ஏலவே உருவாக்கியுள்ளது.
அதனிலும் இவ்வெண்ணிக்கைகள் ஆழமாக வேரூன்றியுள்ள மனித உண்மையொன்றினையும் உள்ளடக்கியுள்ளது. எமது பெற்றோர்கள் ஓய்வுபெறும்போது, அவர்களது உலகம் மேலும் சுருங்கிவிடும். வழக்கமான செயற்பாடுகள் சீர்குழையும், ஆர்வங்கள் கைவிடப்படும், அத்துடன் நோக்கங்கள் மாறி – உடல் பலம், உணர்வுசார் நெகிழ்திறம் மற்றும் உளநல கூருணர்வு என்பன படிப்படியாக அற்றுப்போகும்.
60 வருடப் பாரம்பரியத்துடன் இலங்கையின் அதிநம்பிக்கைக்குரிய வயது வந்தோர் போசணை வர்த்தக நாமமான, சஸ்டஜன், மூப்படைவதை இந்த தேசம் எவ்வாறு பார்க்கின்றது என்பதனை மீள்சட்டகமிட முன்வந்துள்ளது. இது படிப்படியான பின்வாங்கலாகவன்றி – பெற்றோர்கள் வினையூக்கத்துடனும், சுயாதீனமாகவும் உத்வேகத்துடனும் வாழும் ஒரு புதிய அத்தியாயமாக காணப்படவேண்டும்.
இந்நம்பிக்கையானது சஸ்டஜனின் புதுப்பிக்கப்பட்ட முன்மொழிவான – தவிர்க்க முடியாத தரம் - ஆரோக்கியமான பெற்றோர் பரம்பரை-என்பதன் ஊடாக உயிரூட்டப்பட்டுள்ளது. இது – அவர்களது வாழ்வை முழுமையாக வாழத் தேவையான போசணையினால் ஆதாரப்படுத்தப்பட்ட, புதுப்பிக்கப்பட்ட நோக்கத்தினை எமது பெற்றோருக்கு வழங்குவதற்கான – சத்தியத்தினையும் செயலுக்கான அழைப்பினையும் வழங்குகின்றது.
இவ்வியக்கத்தின் நாதமானது எளிமையானதாயினும் சக்திமிக்க சிந்தனையொன்றாகும்: ஆரோக்கியமான முதுமையடைதலானது இலட்சியமொன்றையும் – அத்துடன் அதனை நிலைப்பேணுவதற்கு சரியான போசணையையும் தேவைப்படுத்துகின்றது. சஸ்டஜன், அதனது விஞ்ஞானபூர்வமாக உருவாக்கப்பட்ட 24 அத்தியாவசிய போசணைகளது கலவையின் ஊடாக, நம்புவதற்கான தெளிவான மற்றும் தொடர்புடைய காரணிகளுடன் இந்நம்பிக்கையை வலுப்படுத்துகின்றது. முக்கியகவனமானது ஆரோக்கியமான முதுமையடைதலுக்கு உதவும் மூன்று தூண்களில் செலுத்தப்படுகின்றது: வினையூக்கம், நோயெதிர்ப்பு மற்றும் அறிகை பலம். அறுபதிலும் அதற்கு அப்பாலும் புதுவாழ்க்கையொன்றை தொடங்குவதற்கான நம்பிக்கையானது உடல் வலுவடைந்து, நோயெதிர்ப்புசக்தி உந்தப்பட்டு, சிந்தனை கூர்மையாக காணப்படும்போதே வருகின்றது.
இத்தேசியப் பிரச்சினை மீதான கவனத்தை கூர்மைப்படுத்துவதற்காக, இலங்கையில் ஆரோக்கியமான முதுமையடைதல் குறித்த கலந்துரையாடலை வலுவாக நெறிப்படுத்திய அறிவார்ந்த மற்றும் சிந்தனைகிளறல் குழுக் கலந்துரையாடல் ஒன்றினை சஸ்டஜன் நடாத்தியது. நன்கறியப்பட்ட ஊடக ஆளுமையான மாதவ அவர்களினால் தொகுத்தளிக்கப்பட்ட, அக்குழுவானது ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மதுரா (உணவு விஞ்ஞானம் மற்றும்தொழிநுட்பம்), நிலைபேறாக்கப்பட்ட உடல்நலம் மற்றும் வலிமைக்காக மதிக்கப்படும் குறியீடாக திகழும் கிரிக்கெட் வீரரும் பயிற்றுவிப்பாளருமான சமிந்த வாஸ், மற்றும் தங்களது வயதாகும் பெற்றோர் குறித்து அக்கறைக்கொள்ளும் பிள்ளைகளது தலைமுறையின் பிரதிநிதியாக, புகழ்பெற்ற நடிகர் ரொஷான் ரனவண மற்றும் முன்னாள் இலங்கை அழகி அனுமதி குணசேகர ஆகியோரினை ஒருங்கே கொணர்ந்திருந்தது. இக்கலந்துரையாடல் பெற்றோர் தங்களது பின்னாட்களை எவ்வாறு அனுபவிக்கவேண்டும் என்பதனை கூட்டாக வடிவமைக்கும் சிந்தனை, நோக்கம், குடும்ப ஆதரவு மற்றும் போசணை என்பவற்றை வெளிப்படுத்தியிருந்தது.
இந்நிகழ்வில் உரையாற்றும்போது, பேராசிரியர் மதுரா அவர்கள் ஆரோக்கியமான முதுமையடைதலை இயலச்செய்வதில் போசணையின் வகிபாகத்தினை அழுந்தக்கூறினார்.
“பெற்றோர்களுக்கு வயதாகுகையில், அவர்களது போசணைத் தேவைகள் குறிப்பிடத்தக்களவில் மாற்றமடையும். வினையூக்கத்தினை பேணுவதற்கும், நோயெதிர்ப்புசக்தியை தூண்டுவதற்கும் மற்றும் அறிகைபலத்தினை பாதுகாப்பதற்கும் போதுமானளவு அத்தியாவசிய போசணைகளினை உள்ளெடுப்பது மிகமுக்கியமானதாகும். வினையூக்கமான வாழ்க்கைமுறை மற்றும் புதுப்பிக்கப்பட்ட நோக்கத்துடன் சரியான போசணைகள் இணையும்போது, முதியோரின் வாழ்க்கைத் தரத்தினை பாரியளவில் மேம்படுத்தும்.”
மகன்களுக்கும் மகள்களுக்குமாக – பெரும்பாலும் அறியப்படாத தீர்மானம் மேற்கொள்பவர்களான- இவ்வியக்கமானது பொறுப்புக்களை வாய்ப்புக்களாக மீள்வரையறுத்துள்ளது. இதுவொரு சக்திவாய்ந்த கேள்வியினை கேட்கின்றது: உங்களது பெற்றோர்கள் கண்டுபிடிக்க நீங்கள் உதவக்கூடிய புதிய ஆரம்பம் எது? எப்போதோ மறந்துப்போன ஆர்வம்; மகிழ்ச்சியினை கொணரக்கூடிய வழக்கமான நடவடிக்கை; மற்றும் ஆர்வத்துடன் ஒவ்வொரு நாளும் காலையில் விழிப்பதற்கானவொரு காரணம். சஸ்டஜன் சக்திக்கான உந்துதலாகவும், நோயெதிர்ப்புச் சக்தியினை வலுப்படுத்துவதும் மற்றும் மனநல தெளிவிற்கு உதவுவதுமான நாளாந்த நிகழ்வுகளது பகுதியொன்றாவதன் ஊடாக இப்பயணத்திற்கு உதவவுள்ளது.
ரெக்கிட் ஸ்ரீ லங்கா – சந்தைப்படுத்தல் முகாமையாளரான, அனுராதா ஹேவாகே அவர்கள் இவ்வர்த்த கநாமத்தின் நோக்கத்தினை பகிர்ந்துக்கொண்டார்:
“இலங்கையர்களுக்கு வயதாகின்றபோது, கலந்துரையாடல்கள் கரிசனங்களில் இருந்து செயல்களை நோக்கியதாக நகர வேண்டும். சஸ்டஜன் ஊடாக, தங்களது பெற்றோர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட நோக்கமொன்றை வழங்கும் அதேநேரம், அவர்கள் ஆரோக்கியமாக முதுமையடைவதற்கு தேவையான போசணை ஆதரவினை வழங்குவதற்குமாக பிள்ளைகளை ஈர்க்க விரும்புகின்றோம். இதுவொரு வர்த்தக நாமத்தின் துவக்கம் என்பதனைக் காட்டிலும் - பெற்றோர்களது ஆரோக்கியமான தலைமுறையையும் அதிஉச்சமாக, பலமான இலங்கைகையும் கட்டியெழுப்புவதற்கான தேசத்திற்கான பணியாகும்.”
இந்நிகழ்வு பங்கேற்பாளrkaள் போசாக்கு இடைவெளிகளைஅடையாளப்படுத்துவதற்கான எளிய மதிப்பாய்வில் பங்கேற்பதற்கும் மற்றும்விழிப்புணர்வை அர்த்தமிக்க செயல்கார்கள் நோக்கி திருப்புவதற்காக – சக்திமிக்க போசணைகள் எவ்வாறு ஆரோக்கியமான முதுமையடைதலுக்கு உதவக்கூடும் என்பதனை புரிந்துக்கொள்வதற்குமான சஸ்டஜன் போசணை ஆய்வுக்கூடத்தினையும் உள்ளடக்கியிருந்தது.
சஸ்டஜன் இலங்கையில் ஆரோக்கியமான முதுமையடைதலை நோக்கிய கலந்துரையாடல்களுக்கு தொடர்ந்தும் தலைமை தாங்கும். ஏனென்றால், எம்மால் காலத்தை நிறுத்த முடியாது, ஆனால் எம்முடைய பெற்றோர்களது வயதினை நோக்கத்துடனும், கண்ணியத்துடனும், வலுவுடனும், மற்றும் அவர்கள் உயிர்வாழ உண்மையிலே தேவையான போசணைகளுடனுமான வழியில் எம்மால் மாற்றமுடியும்.


